மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கம்பு பயிரிடுவதில் விவசாயிகள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதன்மூலம் எதிர்பார்க்கும் லாபத்தை சுலபமாக பெறலாம் என்ற நிலை ஏற்பட்டிருந்தாலும் இதற்கான விதைகள் வேளாண்துறையினரால் வழங்கப்படாதது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், ரெட்டியார்சத்திரம், பழநி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் நீர் ஆதார குறைவால் விவசாயிகள் கடந்த 10 வருடங்களாக கம்பு, கேழ் வரகு, சோளப்பயிர் பயிரிடுவதை குறைத்து வந்தனர்.
ஆனால் குறைந்த நீர் செலவில் பயரிடக்கூடிய பயிரான மக்காச்சோளத்தை அதிகளவில் பயிரிட்டு வந்தனர். தொடர்ந்து மக்காச்சோள பயிரை பயிரிட்டு வந்த நிலங்களில், தாமிரச் சத்து குறைவு ஏற்படுவதால், ஒருசில நிலங்களில் மக்காச் சோள பயிர் சரிவர விளையாமல் பாதியிலேயே கருகிவந்தன. தற்போது சின்னாளபட்டி அருகே முன்னிலைக்கோட்டை, என்.பஞ்சம்பட்டி, கலிக்கம்பட்டி, ஆரியநல்லூர், செட்டியபட்டி, வக்கம்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, வீரக்கல், வண்ணம்பட்டி உட்பட பல கிராமங்களில் விவசாயிகள் கம்பு பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கோ -9, ஐ.சி.எம்.வி 221 ரக கம்பு பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். விதை நட்ட 75 வது நாளில் அறுவடை செய்யலாம் என்பதால், இப்பகுதியில் கம்பு பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பகுதிகளில் பயிரிடப்பட்ட கம்பு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. அறுவடை செய்யப்படும் கம்புகள், வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப் படுகிறது. 10 வருடங்களாக தமிழகத்தில் பல பகுதிகளில் குறைவாகப்பயிரிட்ட கம்பு பயிரின் தேவை அதிகரித்து வருகிறது. குழந்தைகளுக்கும், முதியோருக்கும் அதிக சத்து தரும் பயிர் என்பதால், பொதுமக்கள் இதை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து கம்பு விவசாயிகள் கூறுகையில், குழந்தைகளுக்கும், பெரியோர்களுக்கும் சத்து நிறைந்த உணவாக கம்பு பயிர் இருந்தும் சரிவர நீர் ஆதாரம் இல்லாததால், கம்பி பயிரிட ஆர்வம் குறைந்தது. இதில் மக்காச் சோள பயிர் விதைகள் மற்றும் இதர பயிர் விதைகளை கொடுக்கும் வேளாண்துறை அதிகாரிகள் கம்பு பயிர் விதை கொடுப்பதை தவிர்த்து வருகின்றனர்.
மேலும் கம்பு பயிர் பயிரிட்ட நிலங்களில் கம்பு பயிர் உண்பதற்காக குருவி, மைனா, காகம், புறா, போன்ற பறவைகள் வரும் போது, அவற்றின் எச்சங்கள் நிலத்திற்கு உரமாக இருந்து வந்தன. தற்போது பறவைகளின் வரத்து குறைவால், இயற்கை உரங்கள் நிலத்திற்கு கிடைப்பது குறைந்து செயற்கை உரங்களை நாங்கள் நிலத்திற்கு வாங்கி போட வேண்டிய அவல நிலையில் உள்ளோம், என்றார்கள்.
Source : Dinakaran

No comments:
Post a Comment