விவசாயிகளுக்கு மண் வள அட்டை மற்றும் பயிற்சி கையேடுகளை, வேளாண் துறை அதிகாரிகள் வினியோகம் செய்தனர்.
வாலாஜாபாத்தில், நேற்று காலை, 11:00 மணி அளவில் நடந்த, மண் வள அட்டை வழங்கும் முகாமிற்கு, உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் எம்.பத்மாவதி தலைமை தாங்கினார். வாலாஜாபாத் வட்டார வேளாண் உதவி இயக்குனர் ஜி.லதாபானுமதி முன்னிலை வகித்தார். முகாமில், காஞ்சிபுரம் மாவட்டத்தின், 13 வட்டாரங்களைச் சேர்ந்த, 60 விவசாயிகளுக்கு, பயிற்சி கையேடு மற்றும் மண் வள அட்டைகள் வினியோகம் செய்யப்பட்டன. முகாமில், 'அட்மா' திட்ட தொழில்நுட்ப மேலாளர் எஸ்.கலியபெருமாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Source : Dinamalar
No comments:
Post a Comment