ரப்பர் விவசாயிகள் ரப்பர் நடவுக்கான மானியம் பெற இம்மாதம் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, மார்த்தாண்டம் ரப்பர் வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ரப்பர் விவசாயிகளுக்கு ரப்பர் நடவு செய்ய ரப்பர் வாரியம் மானியம் அளித்து வருகிறது. 25 சென்ட் முதல் 5 ஹெக்டேர் வரை ரப்பர் நடவு செய்யும் விவசாயிகள் மானியம் பெற தகுதியுள்ளவர்களாவர். இதில், அதிகபட்சமாக முதல் 2 ஹெக்டேருக்கு மானியம் வழங்கப்படும். இவ்வருடம் ரப்பர் நடவு செய்த விவசாயிகள் இதற்கான விண்ணப்பத்துடன், ரப்பர் நடவு செய்த இடத்தின் வரைபடத்தின் 2 நகல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் 2 நகல் இணைத்து, வரும் 31ஆம் தேதிக்குள் மார்த்தாண்டம் ரப்பர் வாரிய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மானியத் தொகை, ஒரு ஹெக்டேருக்கு ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்படிவம், ரப்பர் வாரியம் மார்த்தாண்டம், குலசேகரம், குழித்துறை அலுவலகங்களில் கிடைக்கும். மேலும் ரப்பர் வாரிய இணையதளத்திலிருந்தும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Source : Dinamani
No comments:
Post a Comment