வரும், 28ம் தேதி, மண்வளமே பயிர்களின் உயிர் நாடி என்ற தலைப்பில் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது' என, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் மோகன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 28ம் தேதி, காலை, 9 மணிக்கு, 'மண்வளமே பயிர்களின் உயிர் நாடி' என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. இம்முகாமில், மண் வளம், மண்வளத்தை கண்டறியும் வழிமுறைகள், மண்வளத்தை மேம்படுத்தும் உத்திகள், சிறப்பான மண் வளத்தினால் பயிர்களில் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கப்படுகிறது. மேலும், மண்வளத்திற்கு ஏற்ற சமச்சீர் உரமிடுதல் குறித்தும் எடுத்து கூறப்படுகிறது. அதில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள், நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ, வரும், 27ம் தேதிக்குள் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Source : Dinamalar
No comments:
Post a Comment