'ரத்த சோகை மற்றும் கேன்சர் நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவ தால், பாரம்பரிய உணவு முறைக்கு மாறுவது அவசியம்' என, தெரிவிக்கப்பட்டது.
மாநிலத்தில், 'அனிமியா' எனப்படும் ரத்த சோகை, கேன்சர் நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், பாரம்பரிய, இயற்கை உணவு முறை ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. தோட்டக்கலை உட்பட அரசு துறைகளும், சில தனியார் துறைகளும், இயற்கை சாகுபடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.
நீலகிரி உட்பட மாநிலம் முழுக்க, 'ஆரோக்யா' பவுண்டேஷன் என்ற அமைப்பினர், இயற்கை உணவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். நீலகிரியில், பழங்குடியினர் அதிகம் வாழும் கூடலுார், கோத்தகிரி பகுதிகளில், இதுதொடர்பாக சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
'ஆரோக்யா' பவுண்டேஷன் செயலர் செந்துார்பாரி கூறியதாவது:
ரத்தசோகை என்பது பல நோய்களுக்கு மூலக் காரணமாக உள்ளது. நாட்டில், 64 சதவீதம், தமிழகத்தில், 50 சதவீதம் பேருக்கு ரத்த சோகை உள்ளது. 'உலகில், கேன்சர் நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது' என, புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நோய்களுக்கெல்லாம் காரணம், உணவு முறை தான். ரசாயன உரங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் காய்கறி, பயிர் வகைகளை உண்பதன் மூலம், பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.
ராகி, கோதுமை, தினை, கம்பு, காய்கறி, பழங்கள், கீரை வகைகள் என, வீட்டு தோட்டங்களில் வளரும் காய்கறி, சிறு தானியங்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் என, வலியுறுத்தி வருகிறோம்.
மாநிலம் முழுக்க, 1100 கிராமங்கள், நீலகிரியில், 10 கிராம பஞ்சாயத்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இயற்கை உணவு, பாட்டி வைத்தியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு, செந்துார் பாரி கூறினார்.
Source : Dinamalar
No comments:
Post a Comment