Friday, December 4, 2015

நெற்பயிரில் சுருட்டுப்புழு, புகையான் பூச்சி தாக்குதல்


திண்டுக்கல்:மழைக்காலத்தில் நெற்பயிரை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் முறை குறித்து வேளாண் இணை இயக்குனர் சம்பத்குமார் ஆலோசனை கூறியுள்ளார்.
தற்போது பருவநிலை மாற்றம், வட கிழக்கு பருவமழை மற்றும் பனிமூட்டத்துடன் மழை பெய்து வருகிறது. இதனால் பூச்சி மற்றும் நோய்கள் நெற்பயிரை தாக்கி சேதம் விளைவிக்கும். இதனை தடுப்பது குறித்து இணைஇயக்குனர் கூறியதாவது: தற்போது நெல்லில் இலைச் சுருட்டுப்புழு தாக்குதல் இருக்கும். இளம் பயிர்கள் மற்றும் தூர் பிடிக்கும் பருவத்தில் உள்ள பயிர்களை தாக்கும் இப்புழுக்கள், இலைகளை உள்பக்கமாக சுருட்டி பச்சையத்தை சுரண்டி உண்ணும்.
இலைகள் வெள்ளை நிற சுரண்டலுடன் காணப்படும். தாக்குதல் அதிகமானால் செடிகள் காய்ந்து விடும். இதற்கு தழைச்சத்து இடுவதை குறைக்க வேண்டும். இப்புழுவின் அந்தி பூச்சிகளின் நடமாட்டம் அறிந்து விளக்கு பொறி வைத்து அழிக்கலாம். தாவர பூச்சிக் கொல்லியான "அசாடிரக்டீன்' கரைசலை தெளிக்கலாம்.
புகையான் பூச்சி: குளோர்பைரிவால் மருந்தை உபயோகிப்பதன் மூலமும் கட்டுப்படுத்தலாம்.
வயலில் அதிக நீர் தேங்கி வெளியேற முடியாமல் உள்ள இடங்களில் புகையான் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும். நெல்லின் தண்டு பகுதியில் கூட்டமாக அமர்ந்து சாறு உறிஞ்சும் இந்த பூச்சிகளால் நெற்பயிர் முற்றிலும் காய்ந்து விடும்.
இதற்கு தழைச்சத்து உரங்களை இட வேண்டும். செயற்கை பைத்திராய்டு மற்றும் பூச்சிகளின் மறு உற்பத்தியை தூண்டும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த கூடாது.
வேப்ப எண்ணெய் கரைசலை சோப்பு கரைசலுடன் கலந்த தெளிக்க வேண்டும், என்றார்.


Source : Dinamalar

No comments:

Post a Comment