Sunday, December 6, 2015

விளைநிலத்தை மேம்படுத்தலாம் மண்பாதுகாப்பு விழாவில் தகவல்


பழநி:பழநி வேளாண்துறை சார்பில் கோதைமங்கலத்தில் உலக மண்வள பாதுகாப்பு தினவிழா கொண்டாடப்பட்டது.
பழநி வேளாண் உதவி இயக்குனர் சுருளியப்பன் தலைமைவகித்தார். இதில் சில மாதங்களுக்கு முன் விவசாய நிலங்களிலிருந்து மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு மண் ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டது.
இதன் முடிவுகளை வேளாண்துறை இணையதளத்தில் பதிவுசெய்து, விவசாயிகளுக்கு மண் பரிசோதனை முடிவுகள் அச்சிடப்பட்ட அட்டைகள் வழங்கப்பட்டது. மண் ஆய்வு அடிப்படையில் உரங்கள் இடவேண்டும். மண்ணின் பேரூட்டம், நுண்ணூட்டம் அளவைக் கணக்கிட்டு சமச்சீர் முறையில் உரமிட்டால் உரத்தேவை குறையும், கண்மாய் வண்டல், மணல் இட்டு நிலத்தை பயிருக்கு ஏற்றவாறு மேம்படுத்தலாம். மண்ணை ஆய்வு செய்து களர், உவர், அமில தன்மை அறிந்து விவாசயம் செய்தால் மகசூல் அதிகபெறலாம் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. துணை வேளாண் அலுவலர் துரைச்சாமி, அட்மா திட்ட மேலாளர் கோசல்நாத், உதவி தொழிற்நுட்ப மேலாளர் மணிகண்டராஜா மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

Source : Dinamalar

No comments:

Post a Comment