திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே கீழச்சிவல்பட்டியில் தோட்டக்கலைத்துறை சார்பில்காய்கறி சேகரிப்பு மையம் துவக்கப்பட்டது.
பெருநகர காய்கறி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் திருப்புத்தூர் மற்றும் கீழச்சிவல்பட்டியில் காய்கறி சேகரிப்பு மையங்கள் துவக்க அனுமதியாகியுள்ளது. முதலில் கீழச்சிவல்பட்டியில் துவக்கப்பட்டுள்ளது.
கீழச்சிவல்பட்டி,தெக்கூர்,வஞ்சினிப்பட்டி, துவார், நெற்குப்பை பகுதி விவசாயிகளின் காய்கறி இங்கு சேகரிக்கப்படும். இம்மையத்தில் 15 முதல் 20 விவசாயிகள் உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு
நேமம் அரசு தோட்டக்கலை பண்ணையிலிருந்து, வீரிய ஒட்டு தக்காளி,கத்தரி,மிளகாய் நாற்றுகள் மானிய விலையில் வழங்கப்பட்டு,விளைந்த காய்கறிகள் ஒருங்கிணைப்பாளர் மூலம் சேகரிக்கப்படும். பின்னர் பெரு நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படும். துவக்க நாளன்று உதவி இயக்குநர் அழகுமலை, அலுவலர் வடிவேல், உதவி அலுவலர்கள் காசிநாதன்,காமாட்சி பங்கேற்றனர். ஒரு டன் காய்கறி சேகரிக்கப்பட்டு, விற்பனைக்கு அனுப்பப்பட்டது.
Source : Dinamalar
No comments:
Post a Comment