Wednesday, December 16, 2015

சின்ன வெங்காயத்தை பாதுகாக்க பயிற்சி முகாம்


நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 21ம் தேதி, 'சின்ன வெங்காயத்தில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம்' என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம், காலை, 9 மணிக்கு நடக்கிறது.

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் டாக்டர் மோகன் வெளியிட்ட அறிக்கை: விதைகள் மூலம் பரவக்கூடிய நோய்கள், உயிர் பூச்சி மற்றும் பூஞ்சாண கொல்லிகளைப் பயன்படுத்துதல், விதை நேர்த்தி செய்தல், மருந்து தெளிப்பு முறைகள், பூச்சி மற்றும் நோய்களை கண்டறியும் முறைகள் குறித்து விளக்கப்படுகிறது. மேலும், உயிரியல் முறைகளைப் பயன்படுத்தி பூச்சி, நோய்களைக் கட்டுப்படுத்துதல், தாவர நூற்புழுக்களை கண்டறிந்து கட்டுப்படுத்துதல், விதைகளை சேமித்து வைத்தல் போன்ற தொழில் நுட்பங்கள் பற்றியும் எடுத்துரைக்கப்படுகிறது. விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள், நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும், 20ம் தேதிக்குள் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source : Dinamalar

No comments:

Post a Comment