சாத்தான்குளம், : சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதியில் பருவமழை மூலம் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதையடுத்து விவசாயிகள் விவசாயப்பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர்.சாத்தான்குளம், பேய்க்குளம், பகுதி வானம் பார்த்த பூமி என்பதால் குளம் மற்றும் கிணற்று பாசனம் மூலமே விவசாயம் நடந்து வருகிறது. வடக்கிழக்கு பருவமழை மூலம் இப்பகுதியில் போதிய மழை இல்லையென்றாலும் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்துள்ள மழை காரணமாக பெரும்பாலான குளங்கள் நிரம்பியதுடன் கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் நன்செய் பயிர்களான நெல் மற்றும் நிலக்கடலை பயிரை பயிரிட்டுள்ளனர். நாற்று நல்ல முறையில் வளர்ந்து வருகிறது.
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக இப்பகுதியில் போதிய மழை இல்லாமல் இருந்ததில் கிணற்று நீரும் அடி மட்டத்துக்கு போனது. இந்நிலையில் கடந்த எதிர்பார்த்த மழை பெய்ததில் குளம் மற்றும் கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து விவசாயத்துக்கு உதவியது. இந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதி வரை மழை பெய்யாமல் கடும் வெயில் அடித்து வந்ததால் மழை ஏமாற்றி விடும் என கவலை இருந்தது. நவம்பர் மாத தொடக்கத்தில் பெய்த மழை எங்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. ஆதலால் விவசாய பணிகளை தொடங்கியுள்ளோம். இந்த ஆண்டு போதிய மகசூல் கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.
Source : Dinakaran

No comments:
Post a Comment