Wednesday, December 2, 2015

ஆஸ்திரேலியாவில் இருந்து 3.76 லட்சம் டன் கோதுமை இறக்குமதி; மத்திய அரசு மக்களவையில் தகவல்



புதுடெல்லி,

கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியா 3.76 லட்சம் டன் கோதுமையை ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்திருப்பதாக மக்களவையில் உணவுத்துறை மந்திரி ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் விலை குறைவாக இருப்பதால் வியாபாரிகள் மற்றும் மில் உரிமையாளர்கள் இவ்வாறு கோதுமையை இறக்குமதி செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். எனினும், அரசு தரப்பில் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்ய எவ்வித திட்டமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே கோதுமை உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருப்பது இந்தியா என்பது நினைவு கூரத்தக்கது. 


Source : Dailythanthi

No comments:

Post a Comment