Wednesday, December 2, 2015

காங்கயம் உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.59 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனை



காங்கயம்,
காங்கயம் பஸ் நிலையம் அருகே உள்ள சந்தைபேட்டை வளாகத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு காங்கயம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களின் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள், கீரை வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.
உழவர் சந்தையில் கடந்த மாதம்(நவம்பர்) 1 லட்சத்து 80 ஆயிரத்து 808 கிலோ காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.59 லட்சத்து 6 ஆயிரத்து 235 ஆகும். மேலும் உழவர் சந்தையில் நேற்று விற்கப்பட்ட காய்கறிகளின் விலைகள் விவரங்கள் பின்வருமாறு:– (கிலோவில்) தக்காளி ரூ.45–க்கும், கத்தரி ரூ.80–க்கும், வெண்டை ரூ.40–க்கும், பச்சை மிளகாய் ரூ.25–க்கும், சின்னவெங்காயம் ரூ.50–க்கும், பெரியவெங்காயம் ரூ.45–க்கும் விற்பனையானது.

Source : Dailythanthi

No comments:

Post a Comment