நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 28-ஆம் தேதி காலை 9 மணிக்கு மண்வளமே பயிர்களின் உயிர் நாடி என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.
இதுகுறித்து வேளாண் அறிவியல் நிலைய இணைப் பேராசிரியர் என்.அகிலா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இப் பயிற்சியில் மண் வளம், மண் வளத்தைக் கண்டறியும் வழிமுறைகள், மண் வளத்தை மேம்படுத்தும் உத்திகள், சிறப்பான மண் வளத்தால் பயிர்களில் ஏற்படும் நன்மைகள், மண் வளத்துக்கேற்ற சமச்சீர் உரமிடுதல் குறித்த தெளிவான விளக்கங்கள் அளிக்கப்படும்.
இதில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள், ஆர்வமுள்ளோர் கலந்து கொள்ளலாம்.
விருப்பமுள்ளோர் நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் செயல்படும் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு நேரில் வந்தோ அல்லது 04286-266345, 266244, 266650 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ வரும் 27-ஆம் தேதிக்குள் பெயரை கண்டிப்பாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : Dinamani
No comments:
Post a Comment