தருமபுரியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் டிசம்பர் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 30-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
முன்னதாக, அன்றைய தினம் காலை 10 மணிக்கு விவசாயிகள் அறியும் வகையில் வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் கருத்துக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தமான தங்களது குறைகளையும், கருத்துக்களையும் தெரிவித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Source : dinamani
No comments:
Post a Comment