Monday, December 21, 2015

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் மண் பரிசோதனை முகாம்


சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் மண் பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது.
 சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 20 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதிகளில் விவசாயம் பிரதானத் தொழிலாக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக நல்ல மழை பெய்ததன் காரணமாக விவசாயிகள் புத்துயிர் பெற்றுள்ளனர். மண்ணில் இருந்து கிடைக்கும் ஊட்டச்சத்து, பயிருக்கு ஏற்ற உர வகைகள், மண்ணின் உவர் மற்றும் களர் தன்மை,
அதற்கேற்ற பயிரைத் தேர்வு செய்து, அதிக மகசூல் பெறுவதற்கு மண் பரிசோதனை செய்வது அவசியம் ஆகும். தரிசாக இருந்த நிலங்களை தயார் செய்ய வேளாண்மை அலுவலர்கள் அறுவுத்தலின்படி மண் பரிசோதனை செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 இதுவரை, சுல்தான்பேட்டை ஒன்றியம் முழுவதும் 2,500 விவசாயிகளின் நிலங்களில் மண் மாதிரி எடுக்கப்பட்டு, கோவை மண் பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பபட்டுள்ளது. தொடர்ந்து இப்பணியில் சுல்தான்பேட்டை வேளாண்மை துறை அலுவலர்கள், அட்மா திட்ட ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Source : Dinamani

No comments:

Post a Comment