தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் கீழ் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 24-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்திருப்பது:
இந்தக் கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் அனைவரும் நீர்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மைப் பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தோட்டக்கலைத் துறை போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துகளை மட்டும் தெரிவிக்கலாம். இதில், கருத்துகளைத் தெரிவிக்க விரும்புபவர்கள் தங்களது பெயர், ஊர், வட்டாரத்தை டிச. 24-ம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு வட்டாரத்துக்கும் பதிவு செய்துள்ள விவசாயிகளில் முதல் இருவர் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க அனுமதிக்கப்படுவர். மேலும், விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று, பின்னர் மனுக்களை அளிக்க வேண்டும்.
Source : Dinamani
No comments:
Post a Comment