Friday, December 18, 2015

டிச.22-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்


கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், வரும் 22-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் தலைமையில் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், வரும் செவ்வாய்க்கிழமை (டிச.22) காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் அனைவரும் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : Dinamani

No comments:

Post a Comment