Friday, December 18, 2015

21-இல் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்


நெமிலி ஒன்றியம், சயனபுரம் கிராம மந்தைவெளி மைதானத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் திங்கள்கிழமை (டிச.21) நடைபெறுகிறது.
இதுகுறித்து வேலூர் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையத் தலைவர் ச.சரஸ்வதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கால்நடை மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து நடைபெறும் முகாமில் கால்நடைகளுக்கு மலடு நீக்கம், மடிநோய், ரத்தம், ஒட்டுண்ணிகள் பரிசோதனை, கோழிகளுக்கு குருணை தடுப்பு மருந்து, ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
கால்நடைப் பண்ணையாளர்கள், விவசாயிகள் கால்நடைகளை அழைத்து வந்து பயன்பெற வேண்டும் என அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Source : Dinamani

No comments:

Post a Comment