ராமநாதபுரத்தில் 22 விவசாயிகளுக்கு ரூ.22.62 லட்சம் மதிப்பிலான மானியத்துடன் கூடிய வேளாண் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், இந்த இயந்திரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் 15 பேருக்கு தலா ரூ.1.25 லட்சம் வீதம் மொத்தம் ரூ.18.75 லட்சம் மானியத்துடன் கூடிய டிராக்டர் இயந்திரங்கள், 2 பேருக்கு தலா ரூ. ஒரு லட்சம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் மானியத்துடன் கூடிய டிராக்டர் இயந்திரங்கள், ஒருவருக்கு ரூ.48,750 மதிப்பில் ரோட்டோவேட்டர் இயந்திரம், ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் மானியத்தில் விதை விதைக்கும் கருவி, தோட்டக் கலைத்துறையின் சார்பில் 3 பேருக்கு தலா ரூ.40 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1.20 லட்சம் மானியத்துடன் கூடிய பவர் டில்லர் இயந்திரங்கள் உட்பட மொத்தம் 22 பேருக்கு ரூ.22.62 லட்சம் மானியத்தில் வேளாண் இயந்திரங்களை ஆட்சியர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், ஏற்கெனவே விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், வேளாண்மை தொடர்புடைய துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் அதிகாரிகளால் விளக்கம் அளிக்கப்பட்டது. வேளாண்துறை இணை இயக்குநர் நா.வீ.கிருஷ்ணமூர்த்தி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ச.தமிழ்வேந்தன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) அரிவாசன்,தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்கள் பா. இளங்கோவன், பொ.அனுசூயா, எஸ்.அழகேசன் மற்றும் ச.பா.தியாகராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள்,விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Source: Dinamani
No comments:
Post a Comment