கோவை, : கோவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில் மஞ்சள் ரூ.17.62 லட்சத்திற்கு விற்பனையானது. கோவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று மாலை நடந்த மஞ்சள் ஏலத்தில் விரலி ரகம் 115 குவின்டாலும், கிழங்கு ரகம் 35 குவின்டாலும் என மொத்தம் 150 குவின்டால் விற்பனையானது. வழுக்குப்பாறை, பூலுவபட்டி, இருட்டுப்பள்ளம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதை கோவை, பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். விலை விரலி மஞ்சள் குவின்டால் ரூ.8,650 முதல் ரூ.9,888 வரை விற்றது. இதன் சராசரி விலை ரூ.9,600. விற்பனை மதிப்பு ரூ.14.40 லட்சம். கிழங்கு மஞ்சள் குவின்டால் ரூ.8,700 முதல் ரூ.9,400 வரை விற்றது. இதன் சராசரி விலை ரூ.9,200. விற்பனை மதிப்பு ரூ.3.22 லட்சம். இரண்டு ரகமும் சேர்ந்து ரூ.17.62 லட்சத்திற்கு விற்றது. இது கடந்த ஏலத்தை காட்டிலும் ரூ.3.13 லட்சம் அதிகமாகும். எனினும் விரலி மஞ்சள் கடந்த ஏலத்தை காட்டிலும் குவின்டாலுக்கு ரூ.100ம் விரலி மஞ்சள் குவின்டாலுக்கு ரூ.300ம் குறைந்துள்ளது. மஞ்சள் விலை கடந்த 3 வாரமாக அதிகரித்த நிலையிலேயே உள்ளது. எனினும் வரத்து குறைவாக உள்ளது.
Source : Dinakaran
Source : Dinakaran
No comments:
Post a Comment