Wednesday, December 2, 2015

குறிச்சியில் 2 ஆயிரம் டன் உணவு தானியம் சேமிக்க கிடங்கு

கோவை, : கோவை மதுக்கரை தாலூகாவிற்குட்பட்ட ரேஷன் கடைகளுக்கு கோவை நகரில் இருந்து உணவு தானியங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. லாரி மூலமாக ரேஷன் பொருட்கள் கடைகளுக்கு வினியோகம் செய்ய காலதாமதம் ஏற்படுவதாக தெரிகிறது. இதை தொடர்ந்து மதுக்கரை வட்டார பகுதி ரேஷன் கடைகளுக்காக மதுக்கரை ரோடு குறிச்சி பகுதியில் புதிதாக சேமிப்பு கிடங்கு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலமாக 2 ஆயிரம் டன் அளவிற்கு உணவு தானியம் சேமிப்பு வகையில் 2 குடோன் 1.14 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இதில் அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு போன்றவை இருப்பு வைக்கப்படும். மதுக்கரை ரோட்டில் உழவர் சந்தை வளாகம், ரயில்வே மேம்பாலம் சுற்றுப்பகுதியில் உள்ள காலியிடம் போன்றவற்றில் கிடங்கு அமைக்க இடம் தேடும் பணி நடக்கிறது. புதிய கிடங்கு அமைக்கப்பட்டால் மதுக்கரை தாலூகா பகுதியில் ரேஷன் பொருட்கள் வினியோகம் தாமதமின்றி வேகமாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Source : Dinakaran

No comments:

Post a Comment