ெரட்டியார்சத்திரம்:
“இந்தியாவின் மக்கள் தொகை அதிகரிப்பிற்கேற்ப உணவு, காய்கறி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதற்கான நுட்பங்களை இஸ்ரேல் வழங்கும்,” என, இந்தியாவுக்கான இஸ்ரேல் துாதரக அதிகாரி தெரிவித்தார்.திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம்
தோட்டக்கலை மையத்தில், 13.33 ஏக்கர் பரப்பில் இந்தோ- - இஸ்ரேல் நாடுகளின் கூட்டு நுட்பத்தில் காய்கனி உற்பத்தி திட்டம் செயல்படுத்தப்பட்டு
வருகிறது.
இஸ்ரேல் துாதரக மைய வல்லுனர்கள், நேற்று ரெட்டியார்சத்திரம் தோட்டக்கலை மையம் வந்தனர். இஸ்ரேல் காய்கனி தொழில் நுட்ப வல்லுனர்கள் டோ ஷெஜிவ் ஸ்டீன்பர்க், ஆலன்கில் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். குறைந்தளவு தண்ணீரில் பசுமைக்குடில் முறை,திறந்தவெளி சாகுபடியில்
தக்காளி, வெண்டை உள்ளிட்ட காய்கறி உற்பத்தி நுட்பங்களை செயல்படுத்தும் முறைகள் குறித்து கேட்டறிந்தனர். இவற்றின் பராமரிப்பு நிலை, பருவநிலையில் ஏற்படும் தாக்கத்தை தவிர்ப்பது தொடர்பான உத்திகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.
வல்லுனர் டோ ஷெஜிவ் ஸ்டீபன்பர்க் கூறுகையில், “புதிய தொழில்நுட்பம் மூலம் வீரியமிக்க விதை, காய்கறி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். விரைவில் டில்லியில் நடைபெற உள்ள இரு நாடுகளின் கூட்டு நுட்பங்கள் குறித்த மாநாட்டில், அதிகாரிகள் பங்கேற்க வேண்டும். அதில் கிடைக்கும் நுட்பங்களை, இங்குள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் தெரிவிக்க வேண்டும்.
இந்தியாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, உணவு, காய்கறி தேவையும் மிக அதிகமாக உயரும். இதனை சமாளிக்கும் வகையில், உணவுப்பொருள் உற்பத்தியை அதிகரிக்கச்செய்ய வேண்டும். இதற்கு தேவையான நுட்பங்களை இஸ்ரேல் வழங்கும். தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில், அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்,” என்றார். தோட்டக்கலை இணை இயக்குனர் ராஜாமுகமது, துணை இயக்குனர் ராமநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்

No comments:
Post a Comment