Tuesday, November 24, 2015

வேளாண் அறிவியல் நிலையத்தில் இலவச பயிற்சிகள்


ராமநாதபுரம்: ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் இலவச பயிற்சிகள் நடக்க உள்ளன.நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சீகன்பால் கூறியதாவது: ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் நவ., 27 ல் பாலில் மதிப்பூட்டப்பட்ட உணவுகள் குறித்த இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல் நவ., 30 ல் சிறுதானியங்களில் மதிப்பூட்டப்பட்ட உணவுகள் குறித்த பயிற்சி அளிக்கப்படும் இந்த பயிற்சியில் விவசாயிகள், பெண்கள், தொழில் முனைவோர் பங்கேற்கலாம். விரும்புவோர் திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், கடலோர உவர் ஆராய்ச்சி மையம், ராமநாதபுரம், தொலைபேசி எண்: 04567 230250 ல் தொடர்பு கொண்டு தங்களது பெயரை பதிவு செய்ய வேண்டும் என்றார்.




No comments:

Post a Comment