சேலம்: சேலம் விவசாய ஆலோசனை மைய தலைவர் ஜனகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேலம், ஸ்டேட் பாங்க் காலனி, திருஞானசம்பந்தர் சாலையில் உள்ள, வேளாண் பயிற்சி மற்றும் விவசாய ஆலோசனை மையத்தில், விதை முதல் அறுவடை வரை விவசாயம் தொடர்பாக, எல்லாவிதமான பயிற்சியும் அளிப்படுகிறது. மேலும், விவசாயிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கும், பதிலளிக்கப்படும். கெயில் நிறுவன நிதியுதவியில், பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. தேவைப்படும் பட்சத்தில், விவசாயிகளின் நிலத்துக்கு, நேரில் வந்து, செய்முறை விளக்கமும் செய்து காட்டப்படும். நவம்பர் மாத பயிற்சி வரும், 23ல் துவங்கி, 27ம் தேதி வரை, ஐந்து நாட்கள் நடக்க உள்ளது. பயிற்சி பெற விரும்பும் விவசாயிகள் 94436-64578 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment