Tuesday, November 24, 2015

பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 8,602 கனஅடி தண்ணீர் திறப்பு


ஊத்துக்கோட்டை, நவ.24-

பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதிகளிலும், ஆந்திராவிலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரிக்கு கடந்த 14-ந் தேதி முதல் தண்ணீர் வரத்து தொடங்கியது. வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் தொடங்கி படிப்படியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3,231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி ஏரியில் 33.70 அடி நீர் மட்டம் பதிவானது. 2,730 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. வினாடிக்கு 7,780 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

பலத்த மழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமானதால் ஏரியில் இருந்து வினாடிக்கு 8,602 கனஅடி வீதம் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஆந்திராவில் பெய்த பலத்த மழை காரணமாக கிருஷ்ணா நதி கால்வாய் மூலம் வினாடிக்கு 1,200 கனஅடி தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து சேருகிறது.


No comments:

Post a Comment