Thursday, November 26, 2015

திண்டுக்கல்லில் விளையும் 'ஆப்கான்'அத்திப்பழம்


திண்டுக்கல்,: திண்டுக்கல்லில் ஆப்கானிஸ்தான் நாட்டின் அத்திப்பழம் விளைகிறது.தினமும் ஒரு அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் நன்மைகள் ஏராளம். அத்திப்பழம் தமிழகத்தில் மட்டுமே அதிகமாக வளரக்கூடிய பழப்பயிரினம். இதற்கு வாரத்திற்கு ஒரு முறை நீர் ஊற்றினால் போதுமானது. மருத்துவ குணம் நிறைந்த அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்க செய்து, சுறுசுறுப்பை தரும். வைட்டமின் சத்துக்கள் நிறைந்தது. வயிறு, சீறுநீரக கோளாறுகளை நீக்கும். கல்லீரலை பலப்படுத்தும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
விவசாயி மணிவேல் கூறியதாவது: ஆப்கானிஸ்தானில் இருந்து அத்திப்பழ (ஹைபிரிட்)கன்றை தமிழகத்திற்கு கொண்டு வந்து பயிரிட்டேன். எல்லா வகையான மண்பாங்கிலும் கால நிலைகளிலும் வறட்சியை தாங்கி வளரக்கூடியது. நிலத்தில் இட்டவுடன் 3 அல்லது 4 ஆண்டுகளில் காய்க்க துவங்கிவிடும். இதை பயிர் செய்வதன் மூலம் குறைந்த செலவில் அதிக லாபம் பெற முடியும், என்றார்.

  

1 comment:

  1. tell me விவசாயி மணிவேல் phone number

    my phone number is 9751397936

    ReplyDelete