Tuesday, November 24, 2015

5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!


தேனி: மதுரைதேனி உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல ஏரிகள், குளங்கள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வைகை ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார் அம்மாவட்ட ஆட்சியர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள வைகை அணை 111 அடி உயரம் கொண்டது. இந்த அணை, தனது கொள்ளளவான 71 அடியில் 66 அடியை எட்டி உள்ளது.
இதனால், வைகை அணையின் உபரி நீர் எந்த நேரமும் திறக்கப்படலாம் என்பதால், வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

மேலும், இதன் காரணமாக தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


No comments:

Post a Comment