விழுப்புரம்: விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம், நாளை (27ம் தேதி) விழுப்புரத்தில் நடக்கிறது.
மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம், விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நாளை காலை நடக்கிறது. கூட்டத்திற்கு கலெக்டர் லட்சுமி தலைமை தாங்கி, விவசாயிகளின் குறைகளை கேட்டறிகிறார்.
இக்கூட்டத்தில், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டு, தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன் பெறலாம். இவ்வாறு கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment