மதுரை :மதுரை மாவட்டத்தில் 19 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்படவுள்ளன.மதுரையில்
நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் முருகன், திருப்பதி, கணேசன் நெல்
கொள்முதல் மையங்களை திறக்க
வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்து கலெக்டர் சுப்பிரமணியன்,
நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ரெகோபயம் கூறியதாவது: குறுவை நெல் சாகுபடி செய்யப்படும்
19 இடங்களில் கொள்முதல் மையங்கள் திறக்கப்படவுள்ளன. முதற்கட்டமாக தென்கரை, நாச்சிகுளம்,
கல்வேலிபட்டி, குமாரத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதுதவிர மாநிலத்தில் முதல் முறையாக
வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் விவசாயிகளிடம் நேரடியாக நெல் பெறப்பட்டு, ஏலம்
மூலம் விற்று, அவர்களுக்குரிய பணம் வழங்கப்படுகிறது, என்றார்.
நெல் ஏல விற்பனை குறித்து வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை செயலாளர் தவசுமுத்து விளக்கினார்.
நெல் ஏல விற்பனை குறித்து வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை செயலாளர் தவசுமுத்து விளக்கினார்.
No comments:
Post a Comment