Monday, November 23, 2015

நீரிழிவு நோயாளிகளுக்கு 'சுகர் ப்ரீ' நெல் சாகுபடி


திருப்பதி:நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற, 'சுகர் ப்ரீ' நெல் சாகுபடியை, ஆந்திர விவசாயிகள் துவக்கி உள்ளனர்.நீரிழிவு நோய் பாதித்தவர்கள், அரிசி சாதம் சாப்பிட கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. அரிசி சாதத்தை குறைவாக சாப்பிடும்படி கூறுவதோடு, சப்பாத்தி, சோளரொட்டி, கேழ்வரகு களி போன்றவை, தேவையான அளவு எடுத்துக் கொள்ளும்படி பரிந்துரைக்கப்படுகிறது. 
இந்நிலையை மாற்ற, ஆந்திர மாநில நாகார்ஜுனசாகர் அணை பாசன விவசாயிகள், 'ஆர்.என்.ஆர்., 15048' என்ற, சுகர்ப்ரீ நெல்பயிர் சாகுபடியை அறிமுகபடுத்தியுள்ளனர். 
ஐதராபாத் விவசாய பல்கலைக்கழக பேராசிரியர் ஜெயசங்கர் கண்டு பிடித்த இந்த நெல்லானது, தற்போது, 2,000 ஏக்கர் அளவுக்கு பயிரிடப்பட்டு உள்ளது. இந்த புதிய வகை நெல், 120 முதல், 125 நாட்களுக்குள் விளைந்து, அறுவைடைக்கு வந்து விடும். சாதாரண ரக நெல் விளைச்சலுக்கு தேவையான செலவில், 50 சதவீதம் மட்டுமே, இதற்குப் போதுமானது. ஏக்கருக்கு, 40 முதல், 45 மூட்டை நெல் கிடைக்கும். குளூக்கோஸ் அளவு குறைவு: சாதாரண நெல் ரகங்களில் தயாராகும் அரிசியில், குளூக்கோஸ் அளவானது, 60 முதல், 80 சதவீதம் வரை இருக்கும். அதனால், நீரிழிவு நோயாளிகள், இந்த நெல்லில் தயாரான அரிசி சாதத்தை அதிக அளவில் சாப்பிட தடை விதிக்கின்றனர். ஆனால், இந்த புதிய வகை நெற்பயிரில் தயாராகும் அரிசியில், 30 முதல், 40 சதவீதம் மட்டுமே குளூக்கோஸ் இருக்கும். இதை, மத்திய உணவு கட்டுபாட்டுத் துறை அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். இந்த புதியரக நெற்பயிரை பயிரிட, விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் மூலம், நல்ல மகசூல் மட்டுமின்றி, லாபமும் கிடைக்கும் 

No comments:

Post a Comment