Monday, November 23, 2015

சொட்டு நீர் பாசன வசதிக்குரூ.7.81 கோடி நிதி ஒதுக்கீடு

தேனி:தேனி மாவட்டத்தில் தோட்டக்கலை சார்பில், சொட்டு நீர் பாசன திட்டம் செயல்படுத்த பொது விவசாயிகளுக்கு ரூ.631.94 லட்சமும், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு ரூ.150 லட்சமுமாக மொத்தம் ரூ. 781.94 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் சிறு,குறு விவசாயிகளுக்கு மத்திய அரசு 35 சதவீதமும், மாநில அரசு 65 சதவீதமும் நிதி உதவி வழங்குகிறது. இதர விவசாயிகளுக்கு மத்திய அரசு 25 சதவீதமும், மாநில அரசு 50 சதவீத நிதி வழங்குகிறது.குறைந்த இடைவெளியுள்ள பயிர்களுக்கு எக்டேருக்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரையும், அதிக இடைவெளி உள்ள பயிர்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை சொட்டு நீர் பாசனம் அமைத்திட மானியம் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, விவசாயிகள் தங்களது போட்டோ, நிலத்தின் சிட்டா, அடங்கல், நில வரைபடம் ஆகியவற்றுடன் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டு, விண்ணப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment