Thursday, November 26, 2015

வானிலை



சென்னை: 'வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள, காற்று அழுத்த தாழ்வு நிலை, குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலையாக வலுவடைந்து உள்ளதுஎனவே, நாளை முதல், தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடந்த முறை போல் இல்லாமல், மழை வெள்ள பாதிப்பை உடனுக்குடன் சீர் செய்ய, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு முன்கூட்டியே துவங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வானிலை ஆய்வு மையம், அறிக்கை:
அந்தமான் தீவுக்கு தென் பகுதி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உருவான, காற்று மேலடுக்கு சுழற்சி, வங்கக் கடலின் தென் கிழக்கு மற்றும் அதன் சுற்றுப்பகுதியை நோக்கி நகர்ந்துள்ளது.இந்த காற்று மேல் அடுக்கு சுழற்சி, குறைந்த காற்று அழுத்தமாக, அடுத்த, 24 மணி நேரத்தில் வலுவடையும்; இதனால், நவ., 30 வரை மழை பெய்யும்.
தேதி வாரியாக மழை:
நவ., 27: தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும்
28:
கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும்
29:
கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிக கனமழை பெய்யும்

30: கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும்.
சென்னையில், அடுத்த, 48 மணி நேரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; மழை அல்லது இடியுடன் கூடிய மழை, ஒரு சில இடங்களில் பெய்யும். சென்னையின் சுற்றுப் பகுதிகளில், ஏற்கனவே மழை பெய்யத் துவங்கி விட்டது. நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் - 7; மகாபலிபுரம் - 4; விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் - 5; செங்கல்பட்டு - 1 செ.மீ., மழை பதிவானது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளது.


தயார் நிலையில்...:
மழை பாதிப்புகளை குறைக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, மாநில பேரிடர் மைய அதிகாரிகள் கூறுகையில், 'கனமழை பெய்யும் என்பதால், மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். வருவாய் துறையுடன், பிற துறைகளும் இணைந்து, சீரமைப்பு பணிகளை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளன' என, பொதுவான தகவல்களை தெரிவித்தனர்.

பிற அரசு துறைகளால் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வருமாறு:


பொதுப்பணித்துறை :
சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி பொதுப்பணித்துறை மண்டலங்களில், கண்காணிப்பு மையங்கள் அமைத்து, நீர் நிலைகள் பற்றிய தகவல்கள், உடனுக்குடன் அரசுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது 
*
முக்கியமான, 15 அணைகள் உட்பட, 89 அணைகளின் நீர் நிலவரத்தை, 24 மணி நேரமும் கண்காணிக்க, மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீர் வளத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள, 13 ஆயிரம் ஏரிகளும் கண்காணிக்கப்படுகின்றன
*
நீர் நிலைகளில் இருந்து உபரி நீரை வெளியேற்ற, மண்டல தலைமை
பொறியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டால் சீர் செய்ய, ஒரு லட்சம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன 


சுகாதாரத்துறை

*
வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில், சிகிச்சை அளிக்க, நடமாடும் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. மழை பாதிப்பு அதிகம் ஏற்படும் பகுதிகளுக்கு, பிற மாவட்டங்களில் இருந்தும் மருத்துவ குழுக்கள் அனுப்பப்படும்
*
குடிநீரில், 'குளோரின்' அளவு பரிசோதனை நடக்கிறது 
*
டேங்கர் லாரிகள் மூலம் பாதுகாப்பான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உபரி நீர்வெளியேற்றம்:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், பூண்டி, சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இவற்றின் மொத்த கொள்ளளவு, 11 டி.எம்.சி., எனப்படும், 30 ஆயிரத்து, 800 கோடி லிட்டர்; அதாவது, தலா, 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, 2.53 கோடி லாரிகள் மூலம் சப்ளை செய்யும் அளவு. இந்த ஏரிகளில், தற்போது, 2.16 கோடி லாரிகள் மூலம் சப்ளை செய்யும் அளவுக்கு நீர் இருப்பு உள்ளது.

அடுத்த, மூன்று நாட்களுக்கு, கனமழை பெய்யும் என, எச்சரிக்கப்பட்டு உள்ளதால், ஏரிகள் பாதுகாப்பு கருதி, உபரி நீரை வெளியேற்றும் பணிகள் தொடர்கின்றன. ''அடையாறு, கூவம், 
ஓட்டேரி நல்லா கால்வாய், பக்கிங்காம் கால்வாய் மற்றும் கேப்டன் காட்டன் கால்வாய்களில் தண்ணீர் அதிகம் செல்கிறது. எனவே, பொதுமக்கள் இங்கு குளிக்கவும், ஆற்றின் கரையோரம் குழந்தைகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது,'' என, சென்னை கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். 


No comments:

Post a Comment