மயிலம்: மயிலத்தில் கரும்பு விவசாயிகளுக்கு நிதிசார் பயிற்சி முகாம் துவங்கியது.
முண்டியம்பாக்கம் ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை,சர்வதேச நிதி கழகம், சாலிடாரிடெட் ஆகியவற்றின் சார்பில், திண்டிவனம் கோட்ட கரும்பு விவசாயிகளுக்கு நிதிசார் பயிற்சி முகாம் நடந்தது. மயிலத்தில் நடந்த முகாமிற்கு கரும்பு விரிவாக்க மேலாளர் சிவாஜிகணேசன் தலைமை தாங்கினார். கரும்பு அலுவலர் முத்துகுமரன் முன்னிலை வகித்தார். சாலிடாரிடெட் ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் வரவேற்றார்.
இந்தியன் வங்கியின் ஓய்வு பெற்ற அதிகாரி இளங்கோவன் கலந்து கொண்டு, கரும்பு விவசாயிகள் வரவு-செலவு கணக்குகள் பராமரித்தல், வங்கிகள் அளிக்கும் குறுகிய, நீண்ட கால கடன் திட்டங்கள், இவைகளுக்கான வட்டி விகிதம், மேலும் சொட்டு நீர் பாசனம், பராமரிப்புகள் குறித்து விளக்கினார். முகாமில் களப்பணியாளர்கள் முத்துவேல், கோபு, சதீஷ்குமார்,சீனிவாசன், கண்ணன் மற்றும் திண்டிவனம் கோட்டத்தை சேர்ந்த கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment