திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில், நாளை (27ம் தேதி) விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
இதில், வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வருவாய் துறை, மின்வாரியம், பொதுப்பணி துறை, தோட்டக்கலை மீன்வள துறை, கால்நடை பராமரிப்பு துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிக துறை மற்றும் இதர வேளாண் சார்ந்த துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் குறைகளுக்கு தீர்வு காண உள்ளனர். இதில், மாவட்ட விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும் என, ஆட்சியர் கேட்டுக் கொண்டு உள்ளார்.
No comments:
Post a Comment