Monday, November 30, 2015

நெற்பயிரில் பூச்சி தாக்குதல் :கட்டுப்படுத்த ஆலோசனை


சிவகங்கை:""நடவு செய்த நெற்பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த மருந்து தெளிக்க வேண்டும்,'' என கண்ணங்குடி வேளாண் உதவி இயக்குனர் சுப்புலட்சுமி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: நடப்பு சம்பா பருவத்தில் நேரடியாக 7,200 எக்டேரில் நெற்பயிர் சாகுபடி செய்து, 60 நாள் பயிராக உள்ளது. கடந்த 10 நாட்களாக தொடர் மழை பெய்துள்ளதால், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அதிகம் தென்படுகிறது.

குறிப்பாக இலைச்சுருட்டுப்புழு,வெட்டுப்புழு, கரையான் மற்றும் குலைநோய் தாக்குதல் காணப்படுகிறது. மேக மூட்டத்துடன் இருப்பதால், பூச்சி தாக்குதல் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இப்பூச்சி நோய் தாக்குதலை கட்டுப்படுத்த "தயோமீதாக்சம்', "டிரைசைக்லோஜோல்' தலா 500 கிராம் மருந்தை ஒரு எக்டேருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் காலை நேரத்தில் தெளிக்கலாம். இப்பயிர் பாதுகாப்பு மருந்துகள் வேளாண் விரிவாக்க மையத்தில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் மூலம் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. விவசாயிகள் வேளாண் அலுவலரை தொடர்பு கொண்டு பெறலாம், என்றார்.

No comments:

Post a Comment