Monday, November 23, 2015

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியிலும் உபரி நீர் திறப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை


மழையின் தீவிரத்தால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சென்னைக்கு குடி நீர் தரும் முக்கிய ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின. இதனால், செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்று மாலை நிலவரப்படி 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர் மட்டம் 19 அடியாக உயர்ந்தது. வினாடிக்கு 513 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் பாதுகாப்பு கருதி நேற்று இரவு முதல் உபரி நீர் திறக்கப்பட்டது. துவக்கத்தில், வினாடிக்கு 250 கன அடியாக திறக்கப்பட்ட நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 500 கன அடி நீரை வெளியேற்றி வருகின்றனர்.
எண்ணூர் முகத்துவாரம்
இந்த உபரி நீர் வெளியேற்றத்தால் கடலில் கலக்கும் எண்ணூர் முகத்துவாரப் பகுதி வரை, கால்வாய் கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  

No comments:

Post a Comment