Monday, November 23, 2015

டிச.4 முதல் சூரிய ஒளி தொழில்நுட்பப் பயிற்சி முகாம்


பெங்களூரில் டிச.4-ஆம் தேதி முதல் சூரிய ஒளி தொழில்நுட்பப் பயிற்சி முகாம் நடக்கவுள்ளது.

இதுகுறித்து சூரிய ஒளி தொழில் மேம்பாட்டுத் திட்ட அலுவலகம் வெளியிட்ட செய்தி: இளைஞர்களுக்கு சுயவேலை வாய்ப்பை உருவாக்குவதற்காக பெங்களூரில் டிச.4-ஆம் தேதி முதல் 3 மாதங்களுக்கு சூரிய ஒளி தொழில்நுட்பப் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இந்தப் பயிற்சியில் சேர விரும்பும் இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பாடப் பிரிவுகளில் டிப்ளமோ அல்லது எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஒயர்மேன், ஃபிட்டர், ஷீட்மெட்டல் பாடப் பிரிவுகளில் ஐடிஐ படித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.  இதைவிட அதிகம் படித்தோருக்கு பயிற்சியில் சேர அனுமதி கிடையாது. ஆர்வமுள்ளோர் நவ.26-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு 080- 23626359, 9986045932, 9844049922  ஆகிய தொலைபேசி எண்கள் மற்றும் இணையதளத்தை அணுகலாம். மின்னஞ்சல் மூலம் விவரங்களைக் கேட்டுப் பெறலாம்.

http://www.dinamani.com/edition_bangalore/2015/11/22/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A.4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81/article3141142.ece

No comments:

Post a Comment