பழநி,:பழநி பகுதியில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் பயறுவகை பயிர்களில்
டி.ஏ.பி., உரம், இலைவழித் தெளிப்பிற்கு 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
பழநி அருகே அமரப்பூண்டியில் டி.ஏ.பி., செயல்விளக்க முகாம் நடந்தது. வேளாண் துணை இயக்குனர் தங்கச்சாமி, உதவி இயக்குனர் சுருளியப்பன் முன்னிலை வகித்தனர்.
துணை இயக்குனர் பேசியதாவது: டி.ஏ.பி., 2 சதவீதம் தெளிப்பதால் பயறுவகைகளில் பூக்கும் தன்மை அதிகரிக்கும்; மணிகளும் திரட்சியாக இருக்கும்; மகசூல் அதிகரிக்கும்.
பூக்கும் தருணத்தில் ஒருமுறை, 15 நாட்களுக்குப் பிறகு மறுமுறை என இருமுறை தெளிக்க வேண்டும் என்றார். உளுந்து வம்பன்-4, வம்பன்-5 விதைப்பண்ணையில், டி.ஏ.பி., இலைவழித்தெளிப்பு முறைகள் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
டி.ஏ.பி., உரம் தெளிக்க ரூ.3.9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழநி, கணக்கன்பட்டி, ஆண்டிப்பட்டி கிராம தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் டி.ஏ.பி., உரம் இருப்புள்ளது. ஏக்கருக்கு 12.5 கிலோ தெளிக்க கூலி சேர்த்து ரூ.1300 செலவாகும். அதில் 50 சதவீதமானியமாக ரூ.650 வழங்கப்படும்.
இத்தொகை விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. வேளாண் அலுலர் மீனாகுமாரி, துணை அலுவலர் துரைச்சாமி, உதவி அலுவலர்கள் சின்னமாணிக்கம், ஜாகீர் ஏற்பாடுகளை செய்தனர்.

No comments:
Post a Comment