அரியாங்குப்பம்,
புதுவை மாநிலம் அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம்
மீனவ கிராமத்தில் புதுச்சேரி மாநில மீனவர்கள் சங்கம் சார்பில் உலக மீனவர்கள் தினம்
கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, சங்க தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கி, சங்க கொடியை
ஏற்றினார். அதனை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு
இனிப்புகள் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், சங்க பொருளாளர்
வீரசேகர் வரவேற்றார். செயலாளர்கள் ரத்தினவேலு, குமார் மற்றும் பாலு, இணைச்செயலாளர்கள்
சண்முகசுந்தரம், சதீஷ் மற்றும் கோபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழச்சியில் துணைச்செயலாளர்கள்
சுப்ரமணி, சிவலிங்கம் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். முடிவில் ஆலோசகர்
அசோகா சுப்ரமணியன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
* கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை மற்றும்
பலத்த காற்றால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும்
பாதிக்கப்பட்டுள்ளதால் ரேஷன் கார்டு ஒன்றுக்கு அரசு சார்பில் தலா ரூ 5 ஆயிரம் நிவாரணமாக
வழங்க வேண்டும்.
* புதுவை அரசால் வழங்கப்படுகின்ற மீனவ பெண்களுக்கான
புயல் நிவாரணம் இதுநாள் வரை வழங்கவில்லை. இந்த நிவாரணத்தை காலம் தாழ்த்தாமல் உடனே வழங்கிட
வேண்டும்.
* நடந்து முடிந்த யு.டி.சி. தேர்வில் மீனவ சமுதாய
மாணவர்களுக்கு 2 சதவீதம் கொடுக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான மாணவர்கள் பாதிக்கப்பட்டதால்
வரும் ஆண்டில் 5 சதவீதமாக உயர்த்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment