உடுமலையில் நடைபெற்ற விவசாயிகள் பயிற்சி கூட்டத்தில் ""பல விவசாயிகள் தாம் சொட்டுநீர்ப் பாசனம் செய்துள்ள தோட்டத்திற்கு ஆற்றுநீர்ப் பாசனமாக மேலும் மேலும் நீரை காடெங்கும் பாய்ச்சுவது களைகளைக் கிளப்பி விடும்'' என்ற தகவலை வெளியிட்ட உடுமலை தோட்டக்கலை உதவி இயக்குநர் டாக்டர் பா.இளங்கோவன் மேலும் கூறியதாவது:
தென்னந்தோப்பில் களைகளை அழிப்பதற்காக கடும் நஞ்சை அதிகம் தெளிப்பது மரங்கள் வளர்ச்சி குன்றி பாதிப்படையச் செய்யும். எனவே தோப்பில் சிறு கருவிகள் கொண்டு எந்தக் களையையும் மடக்கி உழுது மூடி விடலாம் என்றார். அறியாமல் அதிக நீர்ப்பாய்ச்சுவது நம் தலையில் நாமே கொள்ளிக்கட்டை வைத்து சொறிவது போலத் தாங்க முடியாத தொல்லைக்கு வழி வகுக்கும் என்றார்.
பயிரின் நீர்த்தேவை அறியாமல் நீர் கட்டி, மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, பாசிப்பயிறு மற்றும் காய்கறிப் பயிர்களுக்கு ஊறுவிளைக்காது இருந்தாலே பூச்சிகள் பெருகாது. மகசூலும் குறையாது. தென்னை மரத்திற்கு நுண்ணீர்ப் பாசன அமைப்புகள் அமைத்து அதில் நுனியில் பைப் போன்ற "டேப்' முறை நிச்சயம் நுண்ணீர்ப் பாசனத்தின் பூரண பலன்களைப் பெற வாய்ப்பில்லாத சூழலை உருவாக்கும்.
பயிர் தேவைக்கு உரிய மண்வளம் பேணுவதற்கும் அதிக நீர் விடாது. குறிப்பாக களிமண் காடுகளில் கருப்பு மண்ணுடைய பகுதி எப்போதும் நீரைப் பிடித்து வைத்து ஒரு நீர் உட்புகா உபத்திரவத்தை தரும். இதற்கு சிலர் குளத்து வண்டல் என்ற பெயரில் களைகள் கடுமையாகவும் உப்புசத்து அதிகம் உடைய மேற்பரப்பு மண்ணை கடும் வெயிலில் காய்ந்த சத்தே குண்டுமணி அளவு கூட இல்லாத மட்டமான மண்ணை போட்டி போட்டுக் கொண்டு அள்ளி பரப்புவதும் மகா அறியாமையே. மண்புழு உரம் எளிதாக தயாரித்து இடுவதற்கு மனம் இருந்தாலே போதும். மண்ணைப் பேணிட பல பயிர்கள் சாகுபடி மற்றும் பயிர் சுழற்சி முறைகள் நன்கு உதவும். இனியாவது விழித்துக் கொண்டு மண்ணைப் பேணுவோம் எனவும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment