Tuesday, November 3, 2015

சின்ன சின்ன செய்திகள்





பொறிப்பயிர்: ஒரு பூச்சியினம் ஒன்றுக்கும் மேற்பட்ட பயிர் வகைகளில் தோன்றினாலும் ஒரு குறிப்பிட்ட வகை பயிர் அவற்றால் மிகவும் விரும்பத்தக்கதாக இருக்கும். இவ்வகைப் பயிர்களை வரப்புகளிலோ, வரப்பு ஓரங்களிலோ முக்கிய பயிரினூடே ஒரு சில வரிசைகளில் பயிரிட வேண்டும். பூச்சிகள் முதலில் இந்த பொறிப்பயிர்களைத் தேர்ந்தெடுத்து உண்ணும். அப்போது நாம் பாதுகாப்பு முறைகளை பொறிப்பயிர்களில் மட்டும் கடைப்பிடித்து பூச்சிகளை அழித்து அவை முக்கிய பயிர்களுக்கு பரவி சேதப்படுவதை குறைத்திடலாம். பொறிப்பயிர்களுக்கான உதாரணம்.
முக்கிய பயிர் - பருத்தி, தக்காளி, அவரை. 
பொறிப்பயிர் - செண்டுமல்லி
கவரப்படும் தண்டுப்பூச்சி - பச்சைக்காய்ப்புழு
முக்கிய பயிர் - பருத்தி, நிலக்கடலை 
பொறிப்பயிர் - சோளம் 
கவரப்படும் தண்டுப்பூச்சி - குருத்து , தண்டுதுளைப்பான்
முக்கிய பயிர் - முட்டைக்கோசு, பூ கோசு 
பொறிப்பயிர் - கடுகு 
கவரப்படும் தண்டுப்பூச்சி - வைரமுதுகுப்பூச்சி
முக்கிய பயிர் -பருத்தி 
பொறிப்பயிர் -வெங்காயம், பூண்டு 
கவரப்படும் தண்டுப்பூச்சி - இலைப்பேன்
முக்கிய பயிர் - பருத்தி, தக்காளி, நிலக்கடலை 
பொறிப்பயிர் - ஆமணக்கு 
கவரப்படும் தண்டுப்பூச்சி - புருடூனியா புழு

சோளம் சாகுபடி நுட்பங்கள்: சோளம் தீவனம், தீவனப்பயிர் மற்றும் தானியப் பயிராகப் பயன்படுத்தப் படுகிறது. தமிழகத்தில் நாமக்கல், திண்டுக்கல், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம், விருதுநகர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் பெரும்பாலும் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் சோளம் ஆடிப்பட்டம் (ஜூலை - செப்டம்பர்), புரட்டாசி பட்டம் (அக்டோபர் - டிசம்பர்) மற்றும் கோடை காலங்களில் பயிரிடப்படுகிறது. கோ.30 என்ற ரகம் தீவனத்துக்கும், உணவுக்கும் ஏற்றது. இந்த ரகம் அதிக மகசூல் கொடுப்பதால் விவசாயிகளிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சோள சாகுபடியில் முக்கியமாக இரண்டு கட்டங்கள் உள்ளன. அதாவது பூ பூக்கும் போதும், கதிரில் பால் பிடிக்கும் போதும் மழை வந்து விடக்கூடாது. இதைக்கவனித்து சாகுபடி செய்வது நல்லது. விதைப்பு செய்த 30ம் நாள், பூ வைக்கும் 90ம் நாள் கதிர்களில் பால் பிடிக்கும். இந்த நாட்களில் மழை பெய்து விட்டால் கதிரில் பூஞ்சாணம் பிடித்து விடும். விளைச்சலும் நன்றாக இருக்காது. கோவில்பட்டியில் உள்ள ஆராய்ச்சி நிலையத்தில் கே.12 என்ற ரகத்தை உருவாக்கியுள்ளார்கள். இந்த ரகம் மானாவாரி சாகுபடிக்கும் கரிசல் மண் வகைக்கும் ஏற்றது. தானியச் சோளத்தின் தற்போதைய பண்ணை விலை ரூ.21 முதல் 23 வரை சந்தையில் விற்கப்படுகிறது. தகவல் : முனைவர் ஆர்.ரவி கேசவன், பேராசிரியர் மற்றும் தலைவர், சிறுதானியங்கள் துறை, .வே.பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் -641 003. தொலைபேசி: 0422 - 245 0507

பப்பாளி பழத்தின் சிறப்பு: இது பால் வடியும் வகையைச் சேர்ந்தது. பால் வடியும் பழங்கள் அனைத்தும் தனி மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இன்று விஞ்ஞானபூர்வமாக மிக சக்தி நிறைந்த பழமாக பப்பாளி அறியப்பட்டுள்ளது. இது அனைத்து காலங்களிலும் மலிவாக கிடைக்கின்ற பழமாகும். ஆண்டு முழுவதும் இந்திய சந்தையில் கிடைக்கக் கூடியது. பலரது வீட்டுத் தோட்டத்திலும் பப்பாளி மரம் இருக்கும்.

பப்பாளியில் உள்ள சத்துக்கள்: கலோரி 39 கிராம், கார்போஹைட்ரேட் - 7.2கி, புரதம் - 0.6கி, நார்ச்சத்து - 0.8 கி, வைட்டமின் - 1750மிகி, வைட்டமின் பி - 0.04மிகி, ரைபோபிளேவின் - 0.25 மிகி, நயாசின்-0.2மிகி, வைட்டமின் சி- 57 மி.கி, கால்சியம் - 17 மிகி, இரும்புச்சத்து - 0.5மிகி, பாஸ்பரஸ் - 13 மிகி, பொட்டாசியம்-470 மிகி.
பப்பாளியில் உள்ள வைட்டமின் "' சத்து மாலைக்கண் நோய்க்கு மருந்தாக பெருமளவு பயன்படுகிறது. இதிலுள்ள கால்சியம் மற்றும் பொட்டாசியம் உடலின் மெட்டபாலி சத்தை ஊக்குவிக்க வல்லது. குழந்தைகளுக்கு பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. வைட்டமின் பி.1, பி6, மற்றும் ரிபோப்ளேவின் போன்ற பி வைட்டமின்கள் தோலின் மினுமினுப்பதற்கு உதவுகிறது. செரிமானத்திற்கு உதவுகிறது. உடல் எடையை குறைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தகவல் : கி.ஜோதி லட்சுமி, வேளாண்மை அறிவியல் நிலையம், பாப்பரபட்டி, தர்மபுரி மாவட்டம்.
-
 டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.


No comments:

Post a Comment