Wednesday, March 9, 2016

விவசாயிகளுக்கு மானிய விலையில் பூச்சிமருந்து கிடைக்கும்

விவசாயிகளுக்கு மானிய விலையில் பூச்சிமருந்து வழங்குவதாக வேளாண்துறை சலுகை அறிவித்துள்ளது. பழநி பகுதியில் தற்போது தீவிர விவசாயம் நடந்து வருகிறது. இதுபோன்ற காலங்களில் விவசாயிகளுக்கு வேளாண்துறை சார்பில் வழக்கமாக பல்வேறு மானியங்கள் வழங்கப்படுவது வழக்கம். தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயிர்களை பாதுகாக்கும் பொருட்டு விவசாயிகள் பூச்சிமருந்து அடித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்க திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண்துறை சார்பில் 50% மானியத்தில் சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. 

குயினல்பாஸ் மற்றும் என்.பி.வைரஸ் போன்ற பூச்சிமருந்துகள் 50% மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் பழநி தாலுகா அலுவலகத்தில் உள்ள வேளாண்மைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாமென பழநி வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Source : Dinakaran

No comments:

Post a Comment