Wednesday, January 6, 2016

தீவனத்தில் தேவையான அளவு எரிசக்தி சேர்க்க அறிவுறுத்தல்


தீவனத்தில் தேவையான அளவு எரிசக்தி சேர்க்க வேண்டும் என, கோழிப் பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:   அடுத்த மூன்று நாள்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடனும் மழையற்றும் காணப்படும். இரவில் வெப்பம் குறைந்தும், பகலில் வெப்பம் அதிகமாகவும் இருக்கும். இத்தகைய உயர்வும், தாழ்வும் கலந்த வானிலையில் கோழிகளுக்கு லேசான அயற்சி காணப்படும். இதனால், கோழிகளுக்கான தீவனம், அதன் சுற்றுப்புறச் சூழ்நிலை, தண்ணீர் ஆகியவை தரமானதாக இருக்க வேண்டியது அவசியம். மேலும், தீவனத்தில் எரிக்தியின் அளவு, தீவன எடுப்பை முடிவு செய்யும் காரணியாக இருப்பதால், தீவனத்தில் தேவையான அளவுக்கு எரிசக்தி இருப்பது அவசியம். குறைவாக இருப்பின் கோழிகள் அதிக அளவு தீவனம் உள்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : Dinamani

No comments:

Post a Comment