மாவட்ட வேளாண் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு ரூ.1.19 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இலுப்பூர் வேளாண் விற்பனைக்கூட வளாகத்தில் வேளாண்மைத்துறையின் சார் விவசாயிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. கலெக்டர் கணேஷ் தலைமை வகித்தார். அமைச்சர் விஜயபாஸ்கர் விவசாயிகளுக்கு நலத்திட்ட எதவிகளை வழங்கினார். விழாவில் அன்னவாசல் மற்றும் விராலிமலை வட்டாரத்திற்குட்பட்ட தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டம் 2015-16ன் கீழ் 60 விவசாயிகளுக்கு ரூ.97 லட்சத்தில் மானிய விலையில் பவர் டிரில்லர்கள் கருவிகள், 200 விவசாயிகளுக்கு ரூ.6 லட்சத்தில் மானிய விலையில் இயந்திர நெல் நடவு தொழில்நுட்பங்கள், தேசிய நீடித்த நிலையான வேளாண் இயக்கத்தின் கீழ் முதற்கட்டமாக 58 விவசாயிகளுக்கு ரூ.15.95 லட்சம் மானியத்தில் கறவை மாடுகள் மற்றும் பயிர் சாகுபடிக்கான இடுப்பொருட்களும் என ஆக மொத்தம் 318 விவசாயிகளுக்கு ரூ.1.19 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குநர் சந்திரசேகரன், இலுப்பூர் ஆர்டிஓ வடிவேல்பிரபு உள்ளிட்ட பல அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
Source : Dinakaran
Source : Dinakaran
No comments:
Post a Comment