Monday, January 4, 2016

திருவெறும்பூர் பகுதியில் நேந்திரன் வாழைக்காய் அறுவடை பணி தீவிரம்

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் நேந்திரன் வாழைக்காய் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவெறும்பூர் அடுத்த கல்லணையின் நடு கரை பகுதியான திருவளர்ச்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நேந்திரன், ராணி பூவன் வாழைக்காய்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது காய்கள் நன்றாக வளர்ந்துள்ளதால் அறுவடை பணி துவங்கி தீவிரமாக நடந்து வருகிறது. சிப்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்க பயன்படுவதால் கேரளாவில் நேந்திரன் வாழைக்கு நல்ல மவுசு உள்ளது. அங்கு ஒரு கிலோ ரூ.32 வரை விற்பனை ஆகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் அறுவடை செய்து கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். மேலும் நல்ல விலை கிடைக்க வேண்டும் என்றால் திருச்சியில் வாழைக்காய் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Source : Dinakaran

No comments:

Post a Comment