தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில், விவசாயிகளுக்கு அடுத்த ஏழு ஆண்டுகளுக்கான செயல் திட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சி, ஒன்றியங்கள் தோறும் நடந்து வருகிறது. நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை வட்டார அளவிலான செயல் திட்டம் தயாரிப்பது குறித்து, விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பொன்னுசாமி பங்கேற்றார். இதில், முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மெட்டாலாவில் உழவர் சந்தை, 75 சதவீத மானியத்தில் சிறுதானிய அறுவடை இயந்திரம், மினி டிராக்டர், ஒவ்வொரு பயிருக்கும் தனிகாப்பீடு, அனைத்து விவசாயிகளுக்கும் தேனீ வளர்ப்பு பெட்டி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்தனர்.
Source : Dinamalar
Source : Dinamalar
No comments:
Post a Comment