Friday, December 18, 2015

வைரஸ் காய்ச்சலை போக்கும் பவளமல்லி

We invite you to parijatam coral orchids. Dengue, which is after the flooding rains. Curable, like malaria, which can prepare medicines.


பவள மல்லியை நாம் பாரிஜாதம் என்றும் அழைக்கிறோம். மழை வெள்ளத்திற்கு பிறகு வரக் கூடிய டெங்கு. மலேரியா காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்தக் கூடிய மருந்துகளை தயார் செய்யலாம். முதலில் நாம் பவளமல்லி இலையை பயன்படுத்தி டைபாய்டு காய்ச்சல் மூளை காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் மூட்டு வலி போன்றவற்றை போக்கக் கூடிய மருந்தை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் பவள மல்லி இலை. பனங்கற்கண்டு. பவளமல்லியின் இலைகள் 4 அல்லது 5 எடுத்துக் கொள்ள வேண்டும். 

சிறிது பனங்கற்கண்டு சேர்க்க வேண்டும். ஒரு டம்ளர் அளவு நீர் விட்டு கொதிக்க விட வேண்டும் இதை நாம் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். காலை மாலை இரு வேளைகளிலும் 50 மிலி வரை பருகி வரலாம். இதை பருகுவதன் மூலம் காய்ச்சலை தருகின்ற கிருமிகளை எதிர்த்து நமக்கு உடலுக்கு ஊக்கத்தை தருகிறது. மூட்டுகளின் வலியையும் குறைக்கிறது. அடுத்து நாம் காய்ச்சல் நேரத்தில் நமது உடலில் அதிகரிக்கும் வெப்பநிலையை குறைக்கக் கூடிய மருந்து ஒன்றை தயார் செய்யலாம். 

பொதுவாக ஈரத்துணியில் பற்று போடுவதுண்டு. அதே போல் கோரைக்கிழங்கை தேய்த்து அதை நெற்றியில் பற்றாக போடுவதன் மூலமும் காய்ச்சலால் ஏற்படும் உடல் சூட்டை தணிக்கலாம். அதே போல் வெட்டிவேர் ஊறப்போட்ட தண்ணீரை எடுத்து காய்ச்சல் நேரத்தில் உடலை துடைப்பதன் மூலம் காய்ச்சலின் கடுமை தணியும். அதே போல் சாதாரணமாக பலசரக்கு கடைகளில் கிடைக்கக் கூடிய வினிகரையும் பற்று போட பயன்படுத்தலாம். 

ஒரு சுத்தமான துணியை எடுத்துக் கொண்டு, அதை வினிகரில் முக்கி எடுக்க வேண்டும். பின்னர் துணியை நன்றாக பிழிந்து கொள்ள வேண்டும். இந்த துணியை பற்றாக போடுவதன் மூலம் காய்ச்சல் நேரத்தில் ஏற்பட்டுள்ள உடல் சூடு தணியும். அதே போல் பப்பாளி இலையை பயன்படுத்தி மலேரியா, டெங்கு காய்ச்சலை போக்கக் கூடிய மருந்தை தயார் செய்யலாம். இதற்கு தேவயைான பொருட்கள் பப்பாளி இலை அல்லது பழம். சீரகம், எலுமிச்சை சாறு. தேன் இளம் தளிரான பப்பாளி இலைகள் 3 அல்லது 4 எடுத்துக் கொள்ள வேண்டும். பெரிய இலைகளையும் பயன்படுத்தலாம். 

பப்பாளி இலை கிடைக்காத நேரங்களில் பழத்தையும் பயன்படுத்தி இதை தயார் செய்யலாம். பப்பாளி இலைகளை நன்றாக சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.  ஒரு ஸ்பூன் சீரகம் சேர்க்க வேண்டும். ஒரு டம்ளர் அளவு நீர் விட்டு கொதிக்க விட வேண்டும். இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது வெட்டி வைத்திருந்த எலுமிச்சையை பிழிந்து கொள்ளலாம். 

பின்னர் சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை பருகி வருவதன் மூலம் வைரஸ் காய்ச்சல் போன்றவற்றை போக்குகிறது. அதே போல் நாட்டு மருந்து கடைகளில் பரவலாக கிடைக்கும் நிலவேம்பு சூரணத்தை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். நிலவேம்பு சூரணம் அரை ஸ்பூன், பனங்கற்கண்டு அரை ஸ்பூன் ஆகியவற்றை ஒரு டம்ளர் நீரில் சேர்த்து கொதிக்க விட வேண்டும். 

இதை அரை டம்ளராக சுருக்கிக் கொள்ள வேண்டும். இதையும் பருகி வருவதன் மூலம் மழை மற்றும் வெள்ளம் போன்ற காலங்களில் ஏற்படும் விஷக்காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் போன்றவற்றில் இருந்து நிவாரணம் பெறலாம். இதனால் வயிறு வலி போன்ற பிரச்னைகளில் இருந்தும் விடுபடலாம். தற்போது மழை வெள்ள காலங்கள் என்பதால் இவற்றை பயன்படுத்தி மக்கள் காய்ச்சல் போன்றவற்றில் இருந்து விடுபட்டு பயன்பெறலாம்.

Source: Dinakaran


No comments:

Post a Comment