Friday, December 18, 2015

வேளாண்மை திட்ட வளர்ச்சி பணிகள் மாவட்ட கலெக்டர் மலர்விழி ஆய்வு



சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வேளாண்மை திட்ட வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் மலர்விழி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வுசிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மைத்துறையின் மூலமாக தேசிய உணவு பாதுகாப்பு திட்டம், திருந்திய நெல் சாகுபடி திட்டம், மாநில விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் மூலமாக பல்வேறு நவீன முறைகள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த வேளாண்மை திட்ட வளர்ச்சி பணிகளின் செயல்பாடு குறித்து மாவட்ட கலெக்டர் மலர்விழி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் சிவகங்கையை அடுத்த சாமியார்பட்டி கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் எந்திர நடவு பணி மற்றும் பாய் நாற்றாங்கால் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த திட்டத்தின் கீழ் புதிய நெல் ரகம் கோ–1 சாகுபடி செய்யப்பட்டுஉள்ளது. இந்த நெல்லை சாகுபடி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் செலவுகள் குறைவது குறித்து கேட்டறிந்தார். மேலும் இந்த திட்டத்தின் கீழ் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
பூச்செடிகள்இதுபோல் துவங்கால் கிராமத்தில் திருந்திய நெல் சாகுபடி திட்டத்தின் கீழ் நெல் பயிரிடப்பட்டதை பார்வையிட்டார். நெல் வயல் வரப்பில் உளுந்து பயிர் சாகுபடி செய்வதை பார்வையிட்டார். மேலும் உளுந்து தவிர செவ்வந்தி, சாமந்தி போன்ற பூச்செடிகளை வளர்க்கவும் ஆலோசனை வழங்கினார். இதைத்தொடர்ந்து முத்துப்பட்டி கிராமத்தில் மாநில விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டத்தில் நடைபெறும் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பண்ணை பள்ளியில் கலந்துகொண்டு பயிற்சியின் நோக்கம் மற்றும் பயன் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். கலெக்டருடன் வேளாண்மை இணை இயக்குனர் குருமூர்த்தி, துணை இயக்குனர்கள் அழகப்பன், மணிவண்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுதர்சன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

Source : Dailythanthi

No comments:

Post a Comment