விருதுநகர்
வேளாண்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கலெக்டர் ராஜாராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வுவிருதுநகர் மாவட்ட வேளாண்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கலெக்டர் ராஜாராமன் ஆய்வு செய்தார். இதன்படி விருதுநகர் வட்டாரத்தில் மெட்டுக்குண்டு கிராமத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் 50 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த குதிரைவாலி கோ.கே.வி–2 ரக தொகுப்பு திடலை கலெக்டர் ராஜாராமன் பார்வையிட்டார். அறுவடைக்கு தயாராக இருந்த குதிரைவாலி பயிரை அறுவடை செய்து தானியங்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருப்பு வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்திடவும், குதிரைவாலி தானியத்தில் மதிப்பு கூட்டி விற்பனை செய்து அதிக லாபம் பெறவும் அறிவுறுத்தினார். மேலும் குதிரைவாலி பயிர் செய்திருந்த விவசாயிகளையும் விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனத்தில் உறுப்பினர்களாகி பயனடையவும் அறிவுரை வழங்கினார்.
ம.ரெட்டியபட்டி வட்டாரத்தில் அணிக்கலக்கியேந்தல் கிராமத்தில் 50 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கடலை பயிரில் மண் பரிசோதனையின் அடிப்படையில் ஒருங்கிணைந்த உர நிர்வாக செயல்விளக்கத்திடலை கலெக்டர் பார்வையிட்டு, தெளிப்பு நீர் பாசனம் கருவியை கொண்டு சிக்கனமாக நீரை பயன்படுத்தவும், கோடையில் நீர் தேவையை சமாளிக்க பண்ணைக்குட்டைகளை அமைக்கவும் அறிவுரை வழங்கினார்.
பருத்தி பயிர்புளியங்குளம் கிராமத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பயறு இயக்கத்தின் கீழ் கடலையில் வரப்பு பயிராக பயிர் செய்யப்பட்டு இருந்த வம்பன்–4 ரக செயல்விளக்கத்திடலை கலெக்டர் பார்வையிட்டார்கள். உடையனேந்தல் கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பருத்தி பயிரில் 2 எக்டர் பரப்பில் அமைக்கப்பட்டு இருந்த முதல்நிலை செயல்விளக்கத்திடலை பார்வையிட்டு பருத்தி பயிர்க்கு மெக்னீசியம் சல்பேட் தெளித்து மெக்னீசியம் குறைபாட்டை களைய அறிவுறுத்தினார்.
அருப்புக்கோட்டை வட்டாரத்தில் செட்டிக்குறிச்சி கிராமத்தில் தேசிய எண்ணெய்வித்து மற்றும் எண்ணெய்பனை இயக்கத்தின் கீழ் 1 எக்டரில் நடவு செய்யப்பட்டு இருந்த புங்கம் மரக்கன்றுகளையும், ஊடு பயிராக சாகுபடி செய்யப்பட்டு அறுவடை நிலையில் இருந்த வம்பன்–3 ரக பாசிப்பயறு பயிர்களையும் கலெக்டர் பார்வையிட்டார்.
Source : Dailythanthi

No comments:
Post a Comment