கரும்பு சாகுபடி ஒரு பருதுண்டு தொழில்நுட்பம்: இம்முறையில் நாற்றங்கால் அல்லது தொழுஉரம் மண் கலவை நிரப்பப்பட்ட குழித்தட்டு மற்றும் பாலிதீன் பைகளில் விதைக்கப்பட்டு நாற்றங்காலில் ஒரு பரு நாற்றுகள் வளர்க்கப்படுகின்றன. இம்முறையில் ஒரு
எக்டருக்கு 1 முதல் 1.5 டன் ஒரு பரு விதை மட்டுமே தேவைப்படுகிறது. ஒரு பரு துண்டு வெட்டி எடுத்தது போக மீதமுள்ள கரும்பினை வெல்லம் தயாரிப்பதற்கோ அல்லது சர்க்கரை ஆலை பயன்பாட்டிற்கோ பயன்படுத்தலாம்.
வழக்கமான முறையை ஒப்பிடும் போது 8090 சதவீதம் கரணை மீதப்படுத்தப்படுவதுடன், அதிக எடையுள்ள விதை கரணைகள் கையாள்வதில் ஏற்படும் சிரமமும் தவிர்க்கப்படுகிறது. நல்ல ஆரோக்கியமான பருக்களை தேர்ந்தெடுத்துக் கொண்டு நோய் பாதிக்கப்பட்ட
அல்லது சேதாரமடைந்த பருக்களை எளிதில் நீக்கி விடலாம். இம்முறையில் ஆட்செலவு பெருமளவில் குறைகிறது. ஒரு பரு துண்டுகள் வெட்டுவதற்கு இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கால் மிதியால் இயக்கப்படும் ஒரு பரு துண்டு வெட்டும் கருவி,காற்றழுத்தத்தால் இயக்கப்படும் ஒரு பரு துண்டு வெட்டும் கருவி, மின் மோட்டாரால் இயக்கப்படும் ஒரு பரு துண்டு வெட்டும் கருவி, குழித்தட்டுகளில்
ஒரு பரு துண்டுகளை இடும் கருவி, டிராக்டரால் இயங்கும் இரண்டு வரிசையில் ஒரு பரு துண்டுகளைக் கொண்டு வளர்க்கப்பட்ட கரும்பு நாற்றுகளை நடும் கருவி. மேலும் விவரங்களுக்கு : முனைவர் செ.ஜேக்கப் அண்ணாமலை, மத்திய வேளாண்மை பொறியியல் நிறுவனம் பிராந்திய மையம், கோயம்புத்தூர் 641 007.

Source : Dinamalar
No comments:
Post a Comment